March 12, 2018
தண்டோரா குழு
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர்.இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்,
“குரங்கணி விபத்து மனதை பிழியும் சோகம்” . மேலும், தீவிபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் நலம் பெற வேண்டும் என்றும், மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.