• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரங்கணி தீ விபத்து 9 உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

March 12, 2018 தண்டோரா குழு

தேனி குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. கடந்த ஒரு வார காலமாக அங்கு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை அறியாது, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் என 36 பேர் அங்கு சென்றனர்.

மலையேற்றப் பயிற்சிக்காக, கொழுக்கு மலைக்கு நேற்று சென்றபோது, காற்றின் வேகத்தால், தீ பரவியதை அறியாது, மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற 36 பேரும், காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மலைக்கிராம மக்கள், காவல்துறையினர், மீட்பு படையினர் ஆகியோர் விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்,

தீ விபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர், ஈரோட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர்களின் சடலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், மீட்கப்பட்டுள்ள 27 பேரில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை. திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் மலையேற சென்றவர்கள் சிக்கி கொண்டனர். குரங்கணியில் இருந்த மீட்கப்பட்டவர்களில் 10 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தீ விபத்தில் சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் உட்பட 6 பேரும், ஈரோட்டை சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி என 3 பேரும் இதுவரை மொத்தம் 9 பேர் பலியாகியுள்ளனர்.

அதைப்போல் மீட்பு பணிகளில் தற்போது இரண்ட ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், மேலும் ஒரு ஹெலிகாப்டர் வர உள்ளதாக ஆட்சியர் பல்லவி குறிப்பிட்டார்.

மேலும் படிக்க