• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நா. மகாலிங்கம் பொதுக் கொள்கைக்கான மையம் துவக்கம்

May 3, 2022 தண்டோரா குழு

குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நா. மகாலிங்கம் பொதுக் கொள்கைக்கான மையம் தொடங்கப்பட்டது. குமரகுரு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் அருட்செல்வர், முனைவர் நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூரும் வண்ணம் இம்மையம் தொடங்கப்பட்டது .

கே.சி.எல்.ஏ.எஸ்., முதல்வர் டாக்டர் விஜிலா கென்னடி வரவேற்புரை வழங்கினார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவர்கள்,கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பொது நலனுக்காக ஒன்றிணைந்து ஒரு கல்வி நிறுவனத்தில் பொதுக் கொள்கை மையத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக பெங்களூரு தக்ஷிலா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிதின் பாய், கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

கோவையில் உள்ள தனியார் தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்ட கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள முன்னேற்றத்தையும் , கோவையின் தனித்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாதிரி குறிப்பிட்டு, இது இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது எனக் கூறினார் .

திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில், இளங்கலை மற்றும் முதுகலை அரசியல் அறிவியல் துறையானது நா. மகாலிங்கம் பொதுக் கொள்கை மையத்துடன் இணைந்து சமூகம் மற்றும் சமுதாயத்தின் சீரிய நலனுக்கான பொதுக் கொள்கைகளில் ஒன்றிணைந்து செயல்பட உள்ளது.

மேலும் படிக்க