• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் கோயம்புத்தூர் “defence conclave 2023′ சிறப்பு கருத்தரங்கம்

July 27, 2023 தண்டோரா குழு

300 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள அனைத்து டெண்டர்களையும் சிறுகுறு தொழில்களுக்கு கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என டிபன்ஸ் காரிடத்துறையில் கோவை சிறந்து விளங்குகிறது என ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு தலைவர் ராமச்சந்திரன் கூறினார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் கோயம்புத்தூர் (“defence conclave 2023′) என்ற சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.இதில் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் ஃபார் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் அகாடமி என்ற தலைப்பு முன்வைக்கப்பட்டு ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் துறைகளில் உள்ள தொழில் முதலீடுகள் மற்றும் தொழில் சார்ந்த பங்களிப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இது குறித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏரோப்ளேன் இண்டஸ்ட்ரி டெவலப் மென்ட் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில்,

தமிழ்நாட்டில் (“defans”) காரிடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் தெரியும் இதன்மூலம் எப்படி தொழில் துறையை உத்தியோகப்படுத்தி முன்னுக்கு கொண்டு வருவது என முயற்சி செய்து வருகிறோம்.தமிழ்நாடு அரசாங்கத்திலிருந்து தமிழ்நாடு போன்றவைகள் எல்லாம் மிகவும் உதவிகரமாக உள்ளன.

இதை ஆரம்பித்த பிறகு தமிழகத்தில் 5000″ கோடி முதலீடு வந்துள்ளது.மேலும் இன்னும் அதிக முதலீடு வரவேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எப்படி பெரிய நிறுவனங்களை கொண்டு வருவது என கோவை தற்போது முன்னணியில் உள்ளது இங்கு அட்டல் இன்னேஷன் சென்டர் உள்ளது அது மிகவும் உதவிகரமாகவும் இங்கே டிட்கோ ஏரோஸ்பேஸ் பார்க் ஏற்படுத்த உள்ளனர் இப்போது டிசன்ஸ் மார்க்கெட் முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறது.

குறிப்பாக 300″ கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள சிறு குறு தொழிலுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.200 “கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள டெண்டர்களை உலக அளவில் அல்லாமல் இந்தியாவிற்குள் தான் வாங்க வேண்டும் என சட்டம் போட்டுள்ளனர். சிறுகுறு தொழிலுக்கு வருவதற்காக இந்திய அரசு பல ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர். கோவைக்கு பிட்கோ டாட்டா 100 கோடி ரூபாய் அளவிற்கு ஒரு சென்டருக்கும் அமைய உள்ளது கோவை இந்த துறையில் நல்ல ஒரு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது எனவே இன்ஜினியரிங் சார்ந்த தொழில் அதிக அளவில் இருப்பதால் இதுவும் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என

இவ்வாறு தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் குமரகுரு கல்வி குழுமங்களின் தலைவர் சங்கர் வானவராயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க