• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குமரகுரு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி கல்வி உதவித்தொகை வழங்கல்

March 28, 2022 தண்டோரா குழு

குமரகுரு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக குமரகுரு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி கல்வி ஊக்கத்தொகை அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.2006 – 2007 கல்வியாண்டிலிருந்து திறன் மிகுந்த மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 1200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, 1.2 கோடி அளவிலான கவ்வி ஊக்கத்தொகை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஆர் வேல்ராஜ் வழங்கினார்.

இதில் டாக்டர். கிருஷ்ணராஜ் வாணவராயர் உரையாற்றும் போது,

குமரகுரு நிறுவனங்களின் அறங்காவலர்கள், சமூக நலத்துறை மாணவர்களுக்கு கற்பிப்பதிலும், கிராமப்புற மக்களுக்கு சிறந்த கல்வியை வழங்க உறுதி கொண்டுள்ளது என தெரிவித்தார். கடந்த 2007 ல் இந்த மகாத்மா காந்தி ஊக்கத் தொகையானது நிறுவப்பட்டது. அருட்செல்வர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் விருப்பப்படி தேசத் தந்தையின் பெயரில் ஊக்கத்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க