• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குமரகுரு கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட எரிசக்தி படகு, சர்வதேச போட்டியில் மூன்றாவது முறையாக பங்கேற்கிறது!

April 16, 2024 தண்டோரா குழு

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியை (KCT) சேர்ந்த 12 மாணவர்கள் அடங்கிய சீ சக்தி குழு Monaco Energy Boat Challenge 2024 இல் பங்கேற்க ஐரோப்பாவில் உள்ள மொனாக்கோவுக்குச் செல்ல உள்ளது.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று குமரகுரு சிட்டி சென்டரில் நடைபெற்றது. இதில் சீ சக்தி குழுவின் செயல்பாட்டு தலைவர் மாணவி ஹேமலதா, பைலட் யுக பாரதி,கல்லூரி முதல்வர் எழிலரசி, மாணவர்கள் ரோஷன் மனோஜ், கிரிதேஷ் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு இதனை பற்றி விளக்கினர்.

இந்த நிகழ்வு இளம் பொறியாளர்கள் மற்றும் தொழில்துறையினரை யாட்டிங் (Yachting) என ஒரு வித படகு துறையில் சுத்தமான ஆற்றலை (Clean Energy) பயன்படுத்தி உந்துசக்தி தொழில்நுட்பத்தை வடிவமைத்து வெற்றிகரமாக பயன்படுத்தி காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் சீ சக்தி என்று பெயரிடப்பட்ட, குமரகுரு கல்வி நிறுவனத்தின் குழு மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்ச் (MEBC) 2024 இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இந்தியாவிலிருந்து ஒரே அணியாக பங்கேற்க தயாராகி வருகிறது. இந்த படகுப் போட்டி ஜூலை முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.

பல்வேறு பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட KCT குழு, உலகெங்கிலும் உள்ள 21 அணிகளில் ஒன்றாக இந்த போட்டியில் ஆற்றல் பிரிவில் கலந்துகொள்கிறது.

சீ சக்தி குழுவினர் தாங்கள் உருவாகியுள்ள படகின் காக்பிட் மற்றும் புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி மிகவும் திறமையான மற்றும் நீடித்த உந்துவிசை அமைப்பை வடிவமைத்து உள்ளனர். தங்கள் படகை புதிதாக அவர்களின் தேவைக்கேற்ப வடிவமைத்து அதற்கு யாலி 3.0 என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படகு 18 நாட்ஸ் வேகத்தில் பயணித்து 25 நாட் வேகத்தை அடைகிறது. படகின் ஓட்டுநர் அமர்ந்து படகை இயக்கும் இடமான காக்பிட்டின் எடை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி இயற்கையான அன்னாசி நார்க்கு இடையில் கார்பன் ஃபைபர் எனும் வலுவான, கனமில்லாத பொருள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்சில் டீம் சீ சக்தி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த ‘தொடர்பாடல்’ பரிசை வென்றதன் மூலம் வரலாற்று மைல்கல்லை எட்டியது. போட்டியில் 10 நாடுகளில் உள்ள 17 அணிகளில் சீ சக்தி மிகவும் பிரபலமானது. “மொனாக்கோ டவுன் ஹால் கோப்பை” பெற்றதைத் தவிர, இரண்டாவது ஆண்டாக ஒட்டுமொத்த தரவரிசையிலும் 6வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு, தகவல்தொடர்பு பரிசைத் தக்கவைத்துக்கொள்வதோடு, வெற்றி மேடைக்கு செல்லவேண்டும் என இந்த சீ சக்தி குழுவினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதன் முதற்கட்ட சோதனைகள் கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்றது. அடுத்து பாண்டிச்சேரியில் நடக்கவுள்ளது. அதன் பின்னர் இந்த குழுவினர் ஜூன் மாத இறுதியில் மொனக்கோ சென்று போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் படிக்க