• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குப்பைத் தொட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் காயம்

May 16, 2022 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது லட்சுமி மில் சிக்னல் அருகே உள்ள குப்பை தொட்டியை சுற்றி கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றி அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் மனோஜ் , சக்திவேல், தண்டபானி, ஹரிஹரன், கோபி உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

அங்கிருந்த குப்பை தொட்டியின் அடிப்பகுதி வழியாக புதைவட மின்சார கேபிள் செல்கிறது. இது உயர் அழுத்த மின்சார கேபிள் ஆகும். இந்த நிலையில் தூய்மை பணியில் ஈடுபட்டவர்களை மின்சாரம் தாக்கியது. இதில் மனோஜ் சம்பவ இடத்தில் சுருண்டு விழுந்தார். மீதம் உள்ள 4 பேருக்கு சிறிய மின் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதில் சுதாரித்து கொண்ட ஒரு நபர் அருகில் கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்து மனோஜ் தள்ளி விட்டார். பின்னர் மனோஜ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க