December 10, 2021
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு சென்றபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஷிபின் என்பவர் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.