May 26, 2018
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 60வது பழக்கண்காட்சி வெகு விமர்சையாக இன்று தொடங்கியுள்ளது.
கோடைக் காலத்தின் சிறப்பாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வருடம் தோறும் பூக்கள் கண்காட்சி பழக்கண்காட்சி குன்னூரில் நடத்தப்படும். இறுதி நிகழ்ச்சியாக இந்தாண்டிற்கான 60வது பழக்கண்காட்சி இன்று குன்னூரிலுள்ள சிம்ஸ் பூங்காவில் தொடங்கியுள்ளது.
இந்த பூங்காவில் பல அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் இருக்கின்றன. மேலும் கேம்பர், காகிதம் மரம், பென்சில், யானைக்கால், ஸ்ட்ராபெரி, டர்பன்டைன் என வெளிநாடுகளில் மட்டுமே காணப்படும் பல அழகிய மரங்கள் உள்ளன. இங்குள்ள ருத்ராட்ச மரம், சிம்ஸ் பூங்காவின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இமயமலை நேபாளம் போன்ற பகுதிகளில் மட்டுமே காணப்படும் ருத்ராட்சம் மரம் இந்த பூங்காவில் நடவு செய்யப்பட்டு பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.