• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குன்னூரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கோவை மாவட்ட அதிமுக., எம்எல்ஏ.,க்கள் அஞ்சலி

December 11, 2021 தண்டோரா குழு

குன்னூரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கோவை மாவட்ட அதிமுக., எம்எல்ஏ.,க்கள் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரியில் கடந்த 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.முப்படை தளபதி உட்பட ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் தங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கோவை மாநகர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொரடாவுமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணுவ வீரர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக., எம்எல்ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், வி.பி, கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க