• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குனியமுத்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது

February 25, 2020 தண்டோரா குழு

டெல்லியில் நடந்த வன்முறையின் எதிரொலியாக குனியமுத்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

CAA NRC NPR போன்றவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் டெல்லியில் மாதங்கள் கடந்தும் மக்களின் தன்னெழுச்சி போராட்டங்கள் நடந்து வருகிறது. டில்லியின் ஜாப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதிகளில் நடந்த போராட்டத்தில் நேற்றும் (பிப்.,24) இன்றும் வன்முறை வெடித்தது. இதில், வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டன. இந்த வன்முறையில் போலீஸ் கான்ஸ்டபிள் ரத்தன் லால் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வன்முறையால் ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக் மற்றும் கர்வால் நகர் ஆகிய 4 நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4000 போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் போராடுபவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் கோவை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் அதன் மாவட்ட தலைவர் அபுதாஹீர். J தலைமையில் கோவை குனியமுத்தூர் BSNL அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் , மாணவர்கள் கலந்துகொண்டு BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் அனைவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க