• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை முடிவில் திமுகவினர் தான் தண்டனை பெறுவார்கள்- எஸ்.பி.வேலுமணி

May 5, 2018 தண்டோரா குழு

குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணையின் முடிவில் திமுகவினர் தான் தண்டனை பெறுவார்கள் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் குடிநீர் திட்டம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைப்பெற்றது.இந்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி,

“குடிநீர் வினியோகம் தொடர்பாக வரும் அனைத்து புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குடிநீர் திட்டங்களுக்காக தோண்டப்படும் குழிகளை தரமான முறையில் மூடவும் விரைந்து சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும்,குட்கா விவகாரம் தொடர்பாக ஸ்டாலினின் கருத்து குறித்து கேட்ட போது சிபிஐ விசாரணை முடிவில் திமுகவினர் தான் தண்டனை பெறுவார்கள்,திமுகவினர் போல் போலியாக கோவில்களுக்கு செல்வதில்லை எனவும் அதிமுகவினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் எனக் கூறினார்.

எந்த மாவட்டதிலும் அமைச்சர்களோ,எம்.எல்.ஏக்களோ காவல்துறையினரை பிற கட்சியினர் மீது வழக்கு பதிய தூண்டுவதில்லை.தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து கண்டறிந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது”.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் துணை சபாநாயகர், எம்.எல்.ஏக்கள்,மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க