April 26, 2018
தண்டோரா குழு
லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரித்து வரும் குட்கா முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது.
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும்,அவற்றை விற்பனை செய்வதற்காக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் லஞ்சம் வாங்கியுள்ளதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து,திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன்,குட்கா ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம்,குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும்,தடையை மீறி நடைபெறும் குட்கா உற்பத்தி,விற்பனை,சந்தையில் கிடைப்பது என அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பில் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.