• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடும்ப சண்டையில் பெண் முகத்தில் ஆசிட் வீச்சு – கோவையில் மூதாட்டி கைது

March 14, 2020

கோவையில் குடும்ப சண்டை காரணமாக பெண் ஒருவர் மீது மூதாட்டி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூலூரை அடுத்த காங்கேயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமாத்தாள் (80). பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் பணி செய்து வருகிறார். இவரது உறவினர் சகுந்தலா (55). இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் இருவரும் வீதியில் கோதாவில் இறங்கியுள்ளனர்.இந்த சண்டை காரணமாக கொதித்துப்போன மூதாட்டி ராமாத்தாள், பாத்திரங்களுக்கு ஈயம் பூச பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து சகுந்தலாவின் முகத்தில் ஊற்றினார்.

ஆசிட் பட்டு அலறித்துடித்த சகுந்தலாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்க்காக அனுமதித்தனர். மேலும், சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமாத்தாளை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க