• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடும்பத்தில் அனைவரும் உபயோகிக்கும் வகையில் அன்லிமிடெட் 4ஜி டேட்டா வி “ரெட்எக்ஸ் பேமிலி பிளான்” அறிமுகம்

August 12, 2021 தண்டோரா குழு

வி, தனது முதன்மை திட்டமான ரெட்எக்ஸ் -ஐ குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் பயன்படுத்தும் வகையில், தனித்துவமான போஸ்ட்பெய்ட் அனுபவத்தை அளிக்கும் ரெட்எக்ஸ் பேமிலி பிளான் விரிவுபடுத்தியிருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் குடும்பங்கள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்திருக்கவும் தங்குதடையில்லாத, சீரான மொபைல் ஃபோன் அனுபவத்தையே சார்ந்திருக்கின்றன.வீட்டில் இருந்தபடியே அலுவலகப் பணிகளைப் பார்க்கும் சூழலில் இருந்துவருவதால், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அன்றாட அதிக அளவிலான டேட்டாவை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் குழந்தைகளுக்கான ஆன்லைன் கல்வி, பொழுதுபோக்கு, ஆன்லைன் மூலம் சமூக ஊடகங்களில் தகவல் பரிமாறிக்கொள்வது என டேட்டா பயன்பாடுக்கான அளவு பெருமளவில் அதிகரித்து இருக்கிறது. இதனால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருடைய தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வரம்பற்ற,அன்லிமிடெட் டேட்டாவுடன் இத்திட்டம் ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா, பொழுதுபோக்கு மற்றும் பயணம் உள்ளிட்ட இன்னும் பல சிறப்பு பலன்களை இனி ஒரேயொரு பில் மூலம் இனி பெறமுடியும்.

ரூ.1699 மற்றும் ரூ. 2299 கட்டணத்தில், வி ரெட்எக்ஸ் பேமிலி பிளான் மூலம் வாடிக்கையாளர்கள் முறையே 3 மற்றும் 5 குடும்ப உறுப்பினர்களை இத்திட்டத்தில் இணைக்க முடியும். ஒவ்வொரு இணைப்பிலும் அன்லிமிடெட் 4ஜி டேட்டாவுடன் கூடிய வி ரெட்எக்ஸ் பேமிலி பிளான் திட்டமானது, வி ரெட்எக்ஸ் திட்டத்தின் பொழுதுபோக்கு, பயணம் தொடர்பான பல அட்டகாசமான நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

ப்ரைமரி மெம்பர் எனப்படும் இத்திட்டத்தின் முதன்மை உறுப்பினர் ஒடிடி தளங்களான நெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் ப்ரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் வி மூவிஸ் அண்டு டிவி பார்த்து ரசிக்க உதவும் விஐபி ஆக்சஸ் உள்ளிட்ட ப்ரத்யேக பொழுதுபோக்கு பலன்களைப் பெறமுடியும். இவற்றுடன், 7 நாட்கள் பயன்படுத்தக்கூடிய, 2999 ரூபாய் மதிப்புள்ள இலவச சலுகையிலான இண்டர்நேஷனல் ரோமிங் பேக்கேஜ்ஜையும் இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த இண்டர்நேஷனல் ரோமிங் சலுகையின் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 14 நாடுகளில் உள்ளவர்களுக்கு சிறப்பு ஐஎஸ்டி ரேட்டில் பேச முடியும். கூடுதலாக ப்ரைமரி மெம்பர்கள், வருடத்திற்கு 4 முறை உள்நாட்டு விமான நிலையங்களின் லவுஞ்ச்களையும், ஒரு முறை சர்வதேச விமான நிலைய லவுஞ்சையும் பயன்படுத்து வாய்ப்பையும், ப்ரீமியம் கஸ்டமர் கேர் சேவையையும் பெறும் சலுகைகளை அளிக்கிறது.

வி நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அவ்னீஷ் கோஷ்லா புதிய திட்டமான ரெட்எக்ஸ் பேமிலி பிளான் குறித்து கூறுகையில்,

“எங்களது வி குடும்பத்திற்காக எங்களுடைய முதன்மையான மற்றும் ப்ரத்யேக திட்டமான ரெட்எக்ஸ் பேமிலி பிளான்-ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.இந்த திட்டம் உண்மையிலேயே மற்றவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, வித்தியாசமான திட்டமாகும். மேலும் இதன் அறிமுகம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மதிப்பை வழங்குவதோடு, போஸ்ட்பெய்ட் சேவையை மேலும் வலுவுள்ளதாக்குகிறது. முன்மொழிவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இந்த திட்டம் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மலிவான கட்டணத்தில் அதிக பயன்களை அளிக்க கூடியதாகவும், மேம்பட்ட பல்வேறு சௌகரியங்களை வழங்கும் ஒன்றாகவும், ப்ரத்யேகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த மதிப்பு சேர்க்கப்பட்ட போஸ்ட்பெய்ட் அனுபவத்தை வழங்குகிறது. நாளுக்கு நாள் அதிகளவிலான டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதால் இனி ஓவ்வொரு குடும்பத்திற்கும் விருப்பமான தேர்வாக வி ரெட்எக்ஸ் பேமிலி முக்கியத்துவம் பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.

மேலும் படிக்க