• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியுரிமை பாதுகாப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

December 19, 2019

கோவை அவிநாசி சாலையில் வஊசி மைதானம் எதிர்ப்புறம் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் குடியுரிமை பாதுகாப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் இயக்கங்கள் பல்வேறு கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” “இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை உடைக்காதே” “மதசார்பின்மையை உடைக்காதே” என கோசங்களை மாணவிகள் எழுப்பினர். அகதிகளாக வருபவர்களை புறக்கணிப்பதை ஏற்று கொள்ள முடியாது எனவும் மதத்தின் அடிப்படையில் வரும் பிரிவினையை ஏற்று கொள்ள முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க