• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் போராட்டம்

December 18, 2019 தண்டோரா குழு

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு
போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும்,கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பறை இசைத்தும், மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி போராட்டம் நடத்தினர். இஸ்லாமியர் மற்றும்
ஈழத்தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருப்பதாகவும், இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுமென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க