• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோவையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

December 17, 2019

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வந்த மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அதிமுக அரசு ஆதரவளித்து துரோகம் இழைத்திருப்பதாகக் கூறி கோவையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்ட திருத்தத்தில் சிறுபான்மையினர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்திருப்பதாக கூறி திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலணி அருகேயுள்ள டாடாபாத் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வந்த மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அதிமுக அரசு ஆதரவளித்து துரோகம் இழைத்திருப்பதாகவும், இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க