• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க தயாரா ? – வானதி ஸ்ரீனிவாசன்

February 28, 2020 தண்டோரா குழு

கோவையில் செஞ்சிலுவை சங்கம் அருகே அமைந்துள்ள சாலையில் தொடங்கி ஆட்சியர் அலுவலகம் வரை பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியில் 600க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியின் முக்கிய கோரிக்கைகளாக சி.ஏ.ஏ விற்கு எதிராக அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துபவர்களை போலிசார் தடுக்க வேண்டும், பாகிஸ்தானர்களுக்கு துணை போகும் திமுக, போராட்டங்களை தூண்டிவிடும் திமுக என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைத்து பேரணியில் பங்கு பெற்றனர்.அதன்பின்னார் பேரணி முடித்தவுடன் பாஜக முக்கிய நிர்வாகிகள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் பேரணியை முன்னிட்டு 1200 போலிசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
வானதி சீனிவாசன் (மாநில பொதுச்செயலாளர்),

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் குடியுரிமை சட்டத்திருத்திற்க்கு எதிராக புரியாமல் தவறான கருத்துகளைக் திணித்து வருகின்றனர். அனுமதி இல்லாத இடத்தில் எல்லாம் தன்னெளிச்சி போராட்டம் என்கிற பெயரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டங்கள் எல்லாம் தடுக்கபட காவல்துறை மாநில அரசாங்கம் முன்வர வேண்டும். இல்லையெனில் நாங்களும் அதுபோன்று போராடுவோம். தமிழகத்தைக் வன்முறை களமாக ஸ்டாலின் மாற்ற முயற்ச்சிகிறார். மேலும் குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க தயாரா ? என்று ஸ்டாலினுக்கு எங்கள் தேசிய செயலாளர் முரளிதர ராவ் அழைப்பு விடுத்தும் இதுவரை ஸ்டாலின் விவாதிக்க தயாராக இல்லை.

மேலும் படிக்க