• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோவை தெற்கு மாவட்ட 82வது வட்ட கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம்

February 7, 2020

குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட 82வது வட்ட கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கப் பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் சார்பில் இந்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட
82வது வட்ட கழகத்தின் சார்பில் கோவை மாநகர மாவட்ட இளைஞரிணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், மற்றும் 82வது வட்ட கழகத்தின் பொறுப்பாளர் பதுருதீன் தலைமையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஜமாஅத்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் இந்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.இதில்,தொழில் நுட்பஅணி் ஒருங்கிணைப்பாளர் முஹ‌ம்ம‌து சன்பர், ஏஎஸ்எப் அப்பாஸ், இலியாஸ், ஏகே.ராஜா, தெளபிக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க