January 25, 2021
தண்டோரா குழு
குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் போலிசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுப்பட்டனர்.
கோவையில் 72வது குடியரசு தின விழா முன்னிட்டு ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி கோவையில் உள்ள மாவட்ட வ.உ.சி மைதானத்தில் நாளை காலை 8.05 மணிக்கு ஆட்சியர் இராசமணி தேசிய கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் அவர், சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார்.
இதையொட்டி கோவை ஆயுதப்படை போலீசார் இன்று காலை குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். கொரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கினால் குடியரசு தின விழாவின் போது பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும், பார்வையாளர்களுக்கும் அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.