January 25, 2021
தண்டோரா குழு
குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை பிக் பஜாரில் மிக மலிவான ஆறு நாட்கள் எனும் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழாக்களை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பியூச்சர் குரூப் குழுமத்தின் முதன்மை ஹைபர் மார்க்கெட்டான பிக் பஜாரில் சிறப்பு ஆபர் விற்பனைகள் பிக் ஆபர் எனும் பெயரில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிக் பஜார் மிக மலிவான 6 நாட்கள் எனும் சிறப்பு விற்பனை ஆபர் துவங்கியுள்ளது.
இதில் ஆன்லைனில் ரூபாய் 2500 செலுத்தி முன் பதிவு வவுச்சர்களை பெற்று ரூபாய் 3000 மதிப்புள்ள பொருட்களை அள்ளி செல்லலாம்.
இது குறித்து கோவை பிக் பஜாரின் பொது மேலாளர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தற்போது அறிவித்துள்ள படி 2500 க்கு ப்ரீ புக்கிங் செய்து பின்னர் வரும் 26 ந்தேதி முதல் 31 ந்தேதி வரை 3000 ரூபாய் பொருட்களை வாங்கலாம் எனவும்,மேலும் இந்த ஆறு நாட்களில் பிக் பஜார் இன் காம்போ சலுகைகள் மற்றும் உணவு மற்றும் பேஷன் பொருட்கள், வீட்டு அலங்காரம், ஹோம் பர்னிச்சர், சமையல் பொருட்கள் மற்றும் தினசரி அத்தியாவசிய பொருட்களில் மாபெரும் தள்ளுபடியை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட கீழ் சலுகையாக இவை அனைத்தும் ஜனவரி 26 முதல் 31 ஆம் தேதி வரையில் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.