March 29, 2017
தண்டோரா குழு
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிபின் பதவிக்காலம் வரும் ஜுன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனையடுத்து அப்பதவிக்கான வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர் மோகன் பகவத்தை குடியரசுத் தலைவராக்குவது பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பரிசீலிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கருத்து கூறியிருந்தது.
மோகன் பகவத்தை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற சிவசேனாவன் கருத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இந்நிலையில் “தாம் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட போவதில்லை. போட்டியிடுவதாக வந்த கருத்து பொய் ” என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.