February 1, 2018
தண்டோரா குழு
குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர் , மாநில ஆளுநர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படுகிறது என அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்நாடாளுமன்ற மக்களவை துவங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்து அருண்ஜேட்லி வாசித்து வருகிறார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. துணை குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ.4 லட்சமாக உயர்த்தப்படுகிறது. மேலும் ஆளுநர் சம்பளம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.