• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிமை பணிக்கான முதனிலை தேர்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம்

October 9, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வரும் (10ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை குடிமை பணிக்கான முதனிலை தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வினை 25 மையங்களில் 10 ஆயிரத்து 955 நபர்கள் எழுதுகிறார்கள்.

இதற்கான முன் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் முன்னிலையில், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநனரும் கோவை மாவட்ட தேர்வு பார்வையாளருமான பிரகாஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இத்தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் எட்டு உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்களும், வட்டாட்சியர் நிலையில் 25 தேர்வு மையங்களுக்கும் தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்களும், துணை வட்டாட்சியர் நிலையில் 46 தேர்வு மைய துணை கண்காணிப்பாளர்களும், 931 அறை கண்காணிப்பாளர்களும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்வையினை பார்வையிடும் பொருட்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சார்பு செயலர் நிலையில் ஒருவரும், தமிழக அரசின் சார்பில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் வெங்கடேஷ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் பிரகாஷ் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க