புத்தாண்டை முன்னிட்டு குடிபோதையில் வாகனங்களை இயக்குவோர் மீது ஐபிசி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக கோவையில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் சோதனைச் சாவடியை ஆய்வு செய்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளுக்கு முறையான போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.
மேலும் தனியார் பேருந்துகளில் ஏறி ஆய்வு மேற்கொண்டு நடத்துனர் ஒருவரைத் தவிர வேறு யாரும் படியில் நின்று நடத்துனர் பணிகளை மேற்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அரசின் விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கோவை மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 1300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் உரிய அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பவர்கள் ஆகியோரை கண்காணிப்பதற்கு ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறிய அவர், அதிவேகமாக விபத்து ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்குவோர் மீது ஐபிசி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதேபோல் அரசின் எச்சரிக்கையை மீறி கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும் தனியார் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்