September 15, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சின்னவேடம்பட்டி, துடியலூர் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
கோவை துடியலூர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் நீருந்து நிலையத்தில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு வார்டு எண் 26, 42, 43 ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த குடிநீர் விநியோம் தொடர்பான குறைபாடுகள், மாநகராட்சிக்கு பெறப்படும் குடிநீர் அளவு குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் துடியலூரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் அருகாமையில் அமைந்துள்ள மாநகராட்சி கழிப்பிடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் பலர் உடனிருந்தனர்.