January 27, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சியில் குடிநீர் பணிகளுக்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குழாய் பதிப்பு, கசிவுகள் அடைப்பு போன்ற பணிகளுக்காக சாலைகளை தோண்டும் முன் மாநகராட்சியின் உரிய அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சமன் செய்திட வேண்டும். ஆர்.எஸ்.புரம் பகுதியில் 24*7 குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, செயற்பொறியாளர் (24*7 குடிநீர் திட்டம்) பார்வதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.