• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிநீர் குழாய் பழுதை உடனடியாக சீர் செய்ய மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

June 18, 2022 தண்டோரா குழு

பழுது ஏற்பட்ட குழாய்களை சீரமைத்து குடிநீரை சீராக விநியோகம் செய்ய கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டார்.

கோவை‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ பெர்க்ஸ்‌ பள்ளி அருகே குடிநீர்‌ குழாயில்‌ பழுது ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் குடிநீர் குழாய் பழுது ஏற்பட்ட இடத்தை மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் போர்கால அடிப்படையில்‌ பணியினை செய்து முடித்து, விரைவில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ செய்திட சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்‌.இந்த ஆய்வின் போது மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) எஸ்‌.அரசு, கிழக்கு மண்டல உதவி கமிஷனர் மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள்‌, சுந்தர்ராஜன்‌, ராமசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ ஜெயலட்சுமி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

மேலும் படிக்க