• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிநீர் கட்டணம், சொத்துவரி செலுத்தும் சேவைகள் சுணக்கமின்றி நடைபெறுகிறது மாநகராட்சி கமிஷனர் தகவல்

September 25, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது,

கோவை மாநகராட்சியில் யூடிஐஎஸ் என்னும் ஒருங்கிணைந்த மென்பொருள் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு, இதுவரை 82 ஆயிரத்து 278 பரிவர்த்தனைகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு, புதிய காலியிட வரி, கட்டட வரைபட அனுமதி ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, யூடிஐஎஸ் மென்பொருள் வாயிலாக சேவை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இணையதளம் வாயிலாக சொத்துவரி மற்றும் குடிநீர்க்கட்டணம் செலுத்துவதில் எவ்வித சுணக்கமுமின்றி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களின் சொத்துவரி, குடிநீர்க்கட்டணங்களை இணையதளம் வாயிலாக செலுத்த கோவை மாநகராட்சியின் இணையதளத்தில் உள்ள இணைப்பிலோ (www.CCms, gov.in) அல்லது Online payment of Tax இணைப்பின் வாயிலாகவோ தங்கள் விவரங்களைப் பதிவு செய்தும் அல்லது நேரடியாக சொத்துவரி, குடிநீர்க் கட்டணங்களை htipsr/tnurbancriy.tn.gov.in இணைப்பின் மூலமும் செலுத்த இயலும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க