• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடிநீர் இணைப்பிற்காக சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் – எஸ்.பி.வேலுமணி

September 23, 2019

கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு நாளை முதல் வழங்கப்படும் எனவும், குடிநீர் இணைப்பிற்காக சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,

கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும். மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பதால் பிரச்சணை இல்லாமல் எளிதாக கிடைக்கும். குடிநீர் இணைப்பிற்காக சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம் இரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும்,சூயஸ் குடிநீர் திட்டம் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது எதிர்கட்சி கொண்டு வந்தாலும் நல்ல திட்டம் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம் சூயஸ் திட்டம் தொடர்பாக பல்வேறு புரளிகளை பரப்பி வருகின்றனர்.சூயஸ் நிறுவனத்திற்கு கட்டண உயர்த்தும் அதிகாரம் கிடையாது. குடிநீர் விநியோக உரிமை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க