• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குக்கர் நிறுவனம் சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான ‘ஃபுட் டெக் ஹேக்கத்தான் 2024’ போட்டி

February 15, 2024 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் குக்கர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவையில் குக்கர் நிறுவனம் இரண்டு வருடங்களாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் புதிய கிளையை துவக்க உள்ளது. குக்கர் நிறுவனம் ஒரு உணவு விநியோக தளத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உணவுகளை விநியோகம் செய்வதற்கு மாறாக வீட்டில் சமைக்க கூடிய உணவு வகைகளை வீட்டிற்கே விநியோகம் செய்து வரும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.மேலும் உணவு விநியோகத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் வகையில் ‘ஃபுட் டெக் ஹேக்கத்தான் 2024’ என்னும் நிகழ்ச்சி கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஃபுட் டெக் ஹேக்கத்தான் நிகழ்ச்சி வியாழக்கிழமை இன்று காலை நடத்தியது.இதன் துவக்க விழாவில், குக்கர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பிரபா சந்தானகிருஷ்ணன், இணை நிறுவனர்கள் நிர்மல்குமார், சரவணகுமார் கந்தசாமி ஆகியோர் துவக்கி வைத்தார்.

‘ஃபுட் டெக் ஹேக்கத்தான்’ போட்டியில் அரசு பொறியியல் கல்லூரியில் 200 மாணவர்களின் 60 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதில் வெற்றி பெற்ற முதல் 5 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஹேக்கத்தான் இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு குக்கர் நிறுவனம் சார்பில் ரூபாய் 50,000 மதிப்புள்ள பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இதுகுறித்து குக்கர் நிறுவனத்தின் மென்பொருள் மேம்பாடு துணைத் தலைவர் ராமநாதன் கூறுகையில்,

குக்கர் நிறுவனம் உணவு விநியோக தளத்தில் புதுவிதமாக வீட்டில் சமைக்க கூடிய உணவுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. மேலும் இவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்பில் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

இப்போட்டியின் மூலம் மாணவர்கள் நடைமுறையில் தொழில்நுட்பத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அமையும். மேலும் திறமையான மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை எங்கள் நிறுவனம் வழங்கி வருகிறது. இதில் மாணவர்கள் திறமையுடன் செயல்படுகின்றனர். மேலும் இது போன்ற நிகழ்வு கோவையில் உள்ள சி.ஐ.டி, பி.எஸ்.ஜி போன்ற பொறியியல் கல்லூரியில் நடத்துவதே எங்கள் நோக்கம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க