• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குக்கர் குண்டுவெடிப்பு குற்றவாளி கோவை ஈஷா மையம் சென்றுள்ளாரா? அதிர்ச்சி தகவல்

November 22, 2022 தண்டோரா குழு

மங்களூருவில் குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்த ஷாரிக் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டம் தீட்டி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவனது பின்னணி தொடர்பாக கர்நாடக மாநில போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தமிழக காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறார்கள்.

ஷாரிக் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு முன்பு கோவையில் 3 நாட்கள் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது போல தமிழகத்திலும் நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதி ஷாரிக் சதி திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாமோ? என்கிற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஷாரிக் கோவை மாவட்டத்தில் உள்ள பிரபல ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை ‘வாட்ஸ் அப்’ முகப்பு படத்தில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து ஷாரிக் ஈஷா மையம் சென்றாரா..? அல்லது எதற்காக ஆதியோகி சிலை புகைப்படத்தை வைத்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ஷாரிக் பயன்படுத்தி வாட்ஸ் அப் எண் பிரேம் ராஜ் என்ற பெயரில், செயல்பட்டு வந்ததாகவும், அந்த எண்ணில் இருந்து யாரிடமும் தொடர்பு கொள்ளவில்லை எனவும், வாட்ஸ் அப் கால் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கலாம் என்றும் தடை செய்யப்பட்ட அமைப்பிடம் ஷாரிக்குக்கு தொடர்பு இருக்கலாம் என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க