• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கீழடியில் 4ம் கட்ட அகழாய்வுக்கு 2 வாராத்தில் அனுமதி வழங்க வேண்டுமென உத்தரவு!

September 22, 2017 தண்டோரா குழு

கீழடி 4ம் கட்ட அகழாய்வு பணிக்கு 2 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் ”மதுரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2000 ஆண்டு பழமையான 5300 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன.ஆனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் தான் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. கீழடியில் அகழ்வாய்வு பணியை தொடரவும்,பழங்கால பொருட்களை கீழடியிலேயே அருங்காட்சியம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக்கூடாது. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடம் அப்படியே இருப்பது தான் சிறப்பு. ஹரப்பா,மெகஞ்சராதோவில் அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்படாமல் தான் உள்ளது. அகழாய்வு நடைபெற்று வரும் இடங்களை தனியாருக்கு இழப்பீடு வழங்கி அரசு பெற நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடந்த 19 ஆம் தேதி நீதிபதிகள் கீழடி சென்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் கைப்பற்றப்பட்ட பொருட்களை எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது என்பன குறித்தும் அகழாய்வு கண்காணிப்பாளரிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் ஸ்ரீராம் கூறுகையில்,

வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் நாட்களில் மழை அதிகமாக இருக்கும். மேலும் இங்கிருக்கும் நில உரிமையாளர்கள் நிலத்தை தர தாமதிப்பதாக கூறினார். அப்போது நீதிபதிகள்,நிலத்தை தர மறுப்பவர்கள் யார். யார் ? என்பது குறித்து நாளை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், 4 ஆம் கட்ட அகழாய்வை நடத்த மத்திய தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தி, மாநில தொல்லியல் துறையினருக்கு ஆய்வு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கூறி விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இன்று இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் ,சதீஷ்குமார் அமர்வு முன்பு தொல்லியல்துறை கண்ணானிப்பாளர் ஸ்ரீராம் ஆஜரானார் அப்போது நீதிபதிகள் ” சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள் , தமிழக அரசு உள்ளிட்ட பலதரப்பினர் நான்காம் கட்ட அகழாய்வு தொடங்கவேண்டும் என விண்னப்பித்துள்ளனர் .

வரும் நவம்பர், டிசம்பர் மழைக்காலங்களாக இருந்தாலும் இங்கு முந்தய அகழாய்வில் பழங்கால மற்றும் ரோமானிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதால் மிகவும் தொன்மையாக கருதப்படுகிறது. எனவே அனுமதியை இரண்டுவார காலத்தில் வழங்க வேண்டும் மேலும் அதன் பணியை விரைவாக செயல்படுத்த வேண்டும் என அறிவுருத்தினர்.மேலும் இவ்வழக்கு மீண்டும் இதே அமர்வு தான் விசாரணை மேற்கொள்ளும் என்றும் 3 வாரகாலத்திற்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க