June 10, 2021
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கீர்த்திலால் ஜுவல்லரி சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஹெல்த் கேர் தொகுப்பு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் P.குமாரவேல் பாண்டியனிடம் வழங்கப்பட்டது.
காந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கீர்த்தால்ஸ் ஜூவல்லரி சார்பில் அதன்
இயக்குனர் சூரஜ் சாந்தகுமார , கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியனிடம் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 10,000 மேற்பட்ட ஹெல்த் கேர் கிட் ஒப்படைக்கப்பட்டது.
வைரம் மற்றும் தங்க ஆபரண தொழில் துறையில் 80 ஆண்டுகளுக்கும் அதிகமாக மக்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்றிருக்கும் இந்தியாவின் முதன்மை பிராண்டான கீர்த்திலால்ஸ்,கோவிட் – 19 பெருந்தொற்று எதிரான போரின் ஒரு பகுதியாக ஆக்சிஜன் செறிவூட்டி சாதனங்களையும் மற்றும் தொடர்புடைய பல மருத்துவ சாதனங்களையும் வழங்கியிருக்கிறது.
இது மட்டுமல்லாமல்,தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் 10000-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை ஊக்குவிக்கும் மருந்து பொருட்கள் அடங்கிய தொகுப்பை இந்நிறுவனம் வினியோகித்திருக்கிறது. தென்னிந்தியா வெங்கும் ஆரம்ப சுகாதார மையங்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்நிறுவனம் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறது.
வெவ்வேறு அமைவிடங்களில், மக்களின் பயன்பாட்டிற்காக ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவக்கூடிய 3000 மேற்பட்ட சிறுதானிய உணவுப் பொட்டலங்களை இந்நிறுவனம் அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது. மருத்துவமனைகளில் சிறப்புச் சிகிச்சை வார்டுகளை உருவாக்கும் பணிகளிலும் இந்நிறுவனம் பங்கேற்று செயலாற்றி இருக்கிறது. அதுமட்டுமின்றி,பாரதியார் பல்கலைக்கழகத்தில் 1000 இருக்கைகள் கொண்ட ஒரு மாநாட்டு மையத்தை உருவாக்கியதன் மூலம் கல்வித் துறையிலும் தனது பங்களிப்பை இது வழங்கியிருக்கிறது.
பெண்களை திறனதிகாரம் பெறவைப்பது உட்பட,பல்வேறு சமூக மேம்பாடு செயல்திட்டங்களில் கீர்த்திலால்ஸ் நிறுவனமும் மற்றும் அதன் பணியாளர்களும் முனைப்புடன் பங்காற்றி வருகின்றனர். நடப்பு பெருந்தொற்று சூழ்நிலையில் சமூகத்தினருக்கு சேவையாற்றுவதற்காக அரசு மற்றும் பொது மக்களோடு கைகோர்த்து கீர்த்திலால்ஸ் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிகழ்வின் போது ,கோவை நகர சுகாதார அதிகாரி டாக்டர் எஸ்.ராஜா,கீர்த்திலால்ஸ் துணைத் தலைவர்ஆர்.முத்துக்குமார், பிராந்திய மேலாளர் ஜெய்தீப் டி. ஜோஷி ஆகியோர் உடனிருந்தனர்.