• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் 10-ம் ஆண்டு விழா !

December 24, 2022 தண்டோரா குழு

கோவை கொடிசியா அருகில் உள்ள கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் பத்தாம் ஆண்டு விழா ‘ஆரா’ 22.12.2022 அன்று மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மாணவச்செல்வங்களின் பஜனைப் பாடல்களுடன் விழா துவங்கியது. பள்ளி தாளாளர் எம். அழகிரிசாமி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் எஸ். ஜி. கவிதா ஆண்டறிக்கை வாசிக்கையில் வருடம் முழுவதும் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக பாரதிய வித்யா பவன் கோவை மையத் தலைவர் டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பங்கேற்றார்.

அவர் பேசுகையில்,

எந்த பள்ளிக்கு சிறந்த பெற்றோர் கிடைக்கிறார்களோ அந்த பள்ளி சிறந்த பள்ளியாகத் திகழும். ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் அளவற்ற அறிவும் ஆற்றலும் புதைந்து கிடக்கிறது.அதை வெளிக்கொணர்வதே கல்வியின் நோக்கமாகும். குழந்தைகளின் கல்வியில் பெற்றோருக்கும் பெரும் பங்கு உள்ளது. கல்வியைக் கற்று பெரிய உயரத்திற்கு சென்றாலும், மாணவர்கள்; நம் தேசம், நம் மொழி, நம் கலாச்சாரம் என்ற உணர்வுடன் என்றும் இருக்க வேண்டும். கொரொனா தொற்றுக்குப் பின்னும் இந்தியா நல்ல பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றார்.

பல்வேறு போட்டிகளில் வென்ற திறமைசாலியான மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆறு முதல் பதினோராம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகள் வானத்தில் விண்மீன்கள் மின்னுவது போல மின்னி அனைவரையும் பரவசப்படுத்தியது. மழலை செல்வங்கள் முதலில் தங்கள் நடனம் மூலம் மேடையை அலங்கரித்தனர்.
பள்ளியின் அறங்காவலர் டாக்டர் ஜனனி மற்றும் தொழிலதிபர் எம் பழனிசாமி மற்றும் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நன்றி உரையுடன் நிறைவு பெற்ற விழா அனைவரின் உள்ளங்களிலும் நீங்காத நினைவுகளாக இடம் பெற்றது என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க