• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிழக்கு மண்டலத்தில் சாலை அமைக்கும் பணிகள் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

March 1, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 75க்குட்பட்ட நியூ போயஸ் கார்டன் பகுதியில் 1 முதல் 7வது வீதி வரை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 750 மீட்டர் தொலைவிற்கு 4 மீட்டர் அகலத்திலும், சலாமத் நகர் பகுதியில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் 701 மீட்டர் தொலைவிற்கு 4.5 மீட்டர் அகலத்திலும் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க வேண்டு என பொறியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி கமிஷனர் மாரிசெல்வி,உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் சத்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க