November 9, 2020
தண்டோரா குழு
கிலோ மீட்டருக்கு ரூ.10 பைசா செலவில் பயணம் செய்யும் வகையில் மின்சார இரு சக்கர வாகனங்களை திருப்பூரை சேர்ந்த நிறுவனம் கோவையில் அறிமுகம் செய்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த சி.கே.மோட்டார்ஸ் சார்பாக பேட்டரியில் இயங்க கூடிய மின்சார வாகன அறிமுக நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது. அப்போது சி.கே மோட்டார்ஸ்-ன் வணிக தலைவர் குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
சரவதேச பிரச்சனையான சுற்றுச்சூழல் மாசுபாடுவதை கருத்தில் கொண்டு எங்கள் நிறுவனம் லித்தியம் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள், மொபட்டுகள் மற்றும் சைக்கிள்களை தயாரித்துள்ளது. இதுவரை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களையும் தீவிரமாக ஆராய்ந்து அதில் காணப்படும் அனைத்து தொழில்நுட்ப மற்றும் இயக்கத்தில் உள்ள இன்னல்களை தவிர்த்து இந்த வாகனங்களை தயாரித்துள்ளோம்.ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டார் வரை செல்லும் வாகனம், 80 கிலோ மீட்டர் மற்றும் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லும் வாகனங்களை தயாரித்துள்ளோம். இந்த மின்சார வாகனங்கள் மூலம் கிலோ மீட்டருக்கு ரூ.10 பைசாவுக்கும் குறைவான செலவில் பயணம் செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.