December 23, 2020
தண்டோரா குழு
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கோவையில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவரணி சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக நூறடி சாலையில் உள்ள அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற இதில்,பெண்களுக்கு இலவச புடவை மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடைகள்,பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களில் கல்வி பயில்வதற்கான நோட்டு புத்தகங்கள்,பேனா,பென்சில் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இது குறித்து விஜய் மக்கள் இயக்க மாணவரணி தலைவர் பாபு கூறுகையில்,
தொடர்ந்து ஆண்டு தோறும் எல்லா பண்டிகை நேரங்களிலும் இது போன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த விழாவில் விஜய் மக்கள் இயக்க மாணவரணி நிர்வாகிகள் விஜயகோபால்,தேன் குமார், ரியாஸ், செல்வம்,,கிரேஸ் அரவிந்த், மாரிராஜ்,கார்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.