• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்

December 24, 2016 தண்டோரா குழு

உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) கொண்டாட உள்ள கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்குப் பல்வேறு தலைவர்கள் சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.

கிறிஸ்தவர்களின் கடவுள் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம் டிசம்பர் 25. இதனை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் வெகு சிறப்பாக கொண்டாடுகிறார். தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக ஆளுநர்:

தமிழக ஆளுநர் ( பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துயரத்தில் இருக்கும் மக்களையும் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களையும் காப்பாற்றுவது கிறிஸ்துமஸ் நாளில் நமது கடமையாகும். உலகில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்ட அன்பையும், கருணையையும் ஊக்கப்படுத்துவோம் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர்:

முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன் என்று அன்பின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய வாழ்க்கை நெறிகளை மக்கள் பின்பற்றி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்தால் வாழ்வு மேன்மையுறும்” என்று கூறியுள்ளார்.

தி.மு.க., தலைவர்:

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட எனது கிறிஸ்தவ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க.:

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சகோதரத்தவம், மனிதநேயம், மேலோங்க அனைவரும் கிறிஸ்துமஸ் நாளில் உறுதிமொழி ஏற்போம்” என்றார்.

கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க