• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கோவையில் ‘சான்டா சோசியல்’ ஷாப்பிங் திருவிழா !

December 18, 2021 தண்டோரா குழு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் வருவதை முன்னிட்டு கோவையில் ‘சான்டா சோசியல் ஷாப்பிங் திருவிழா தொடங்கியுள்ளது.

ரஷ் ரிபப்ளிக் என்ற நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் கார்வெல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கிறிஸ்துமஸ் கார்னிவெல் ‘சான்டா சோசியல்’ என்ற பெயரில் ஷாப்பிங் திருவிழா தொடங்கியுள்ளது.

இதனை வண்டர் டைமண்ட்ஸ் நிறுவத்தின் தலைவர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.

இதுகுறித்து ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மேலாளர் லட்சுமி காந்த் கூறுகையில்,

“இந்த ஷாப்பிங் திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இதில் 80 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது பொருட்களை விறனைக்கு வைத்துள்ளன. உணவு, ஆடை, நகைகள், ஹோம் மேட் சாக்லேட்ஸ் உள்ளிட்ட வெவ்வேறு பொருட்கள் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன.

மேலும், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளும், இசைக்கச்சேரியும் நடைபெறுகின்றன.

மேலும் படிக்க