February 17, 2021
தண்டோரா குழு
கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்குகிறது கோவை தூய மைக்கல் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கிறிஸ்தவா்களால் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். இதனை லெந்து நாட்கள், கஸ்தி நாட்கள் என்றும் சொல்வது உண்டு இந்த தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும் இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் இன்று வருவதால் தவக்காலம் இன்று முதல் தொடங்குகிறது.
இதனையொட்டி கோவை மணிக்கூண்டு பகுதியில் உள்ள தூய மைக்கல் தேவாலயத்தில் இன்று காலை 7 மணிக்கு சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பார்கள். மேலும் தினந்தோறும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் இயேசுவின் சிலுவைப் பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும்.
தவக்காலமான 40 நாட்களில் தொடர்ச்சியில் குருத்தோலை ஞாயிறு பெரிய வியாழன் நிகழ்வுகளும் நடைபெறும் அதன் பின்னர் புனித வெள்ளியும் கடைபிடிக்கப்படும் இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட இயேசுவின் மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்து ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள்.