July 7, 2018 
தண்டோரா குழு
                                சத்துணவு முட்டை வழங்கும் கிறிஸ்டி நிறுவனத்தில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசுக்கு சத்துமாவு,முட்டை,பருப்பு வழங்கும்,கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான நாமக்கல் அலுவலகத்தில் வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்தினர்.இதில்  ரூ.10 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ,அத்தனூர்,புதுச்சத்திரம் பகுதியில் நடந்த சோதனை நிறைவு பெற்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.