• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரேசி மோகன் ஒரு ‘நகைச்சுவை ஞானி’ – கமல் இரங்கல்

June 10, 2019 தண்டோரா குழு

பிரபல நாடக நடிகரும், தமிழ் சினிமா வசன கர்த்தாவுமான கிரேசி மோகனுக்கு இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம்2 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கிரேசி மோகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘கிரேஸி’ என்பது அவருக்கு பொருந்தாத பட்டம்; மோகன் ஒரு ‘நகைச்சுவை ஞானி’ தன்னுடைய திறமைகளை குறைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாக தன்னைக் காட்டிக்கொண்டார் எனக் கூறியுள்ளார்.

கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க