• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 19 ஆவது பட்டமளிப்பு விழா

August 23, 2021 தண்டோரா குழு

கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 19 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற 19வது பட்டமளிப்பு விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் தலைவரும், நிர்வாக அறங்காவலருமான எஸ்.மலர்விழி தலைமையில் முதன்மை செயல் அலுவலர் முனைவர் கே.சுந்தரராமன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.ஜேனட் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.இதில் சிறப்பு விருந்தினராக சாலிதான் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் மேகலா தேவராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, 1080 முதுநிலை மற்றும் இளநிலை பட்டயபடிப்பு சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள்.

தொடர்ந்து கல்வியில் மிகச் சிறந்து விளங்கி உயர் மதிப்பெண்கள் பெற்ற 29 மாணவர்களை வாழ்த்தி கவுரவித்தார். இவ்விழாவில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க