December 23, 2020
தண்டோரா குழு
கிராமப்புற பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கிராம கோவில் பூசாரிகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் கோவை சௌரிபாளையம் பகுதியில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.கோவை மாவட்ட அமைப்பாளர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை ,திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட கிராம கோவில் பூசாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் பின் பேசிய கிராமபுற கோவில் பூசாரிகளின் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம்,
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு கிராமபுற பூசரிகளுக்கு ஊக்க தொகை வழங்குவதகா அறிவித்திருந்தனர். இதனை உடனடியாக தமிழக அரசு கருத்தில் கொண்டு கிராமப்புற பூசாரிகளுக்கு மாதம் ஊக்கத்தொகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கிராமத்தில் உள்ள கோவிலுகளுக்கு மின்சார கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் மாநில இணை பொதுச் செயலாளர் விஜயகுமார் ,கோட்ட தலைவர் ராஜன், மேற்கு மண்டல தலைவர் வேலுசாமி ,மாவட்ட தலைவர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.