• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிராமபகுதியில் வங்கி சேவையை முடக்குவதை கை விடக்கோரி விவசாய அமைப்பினர் மனு

June 10, 2019 தண்டோரா குழு

கோவை கிராமபகுதியில் செயல்பட்டு வரும் வங்கி முடக்குவதை கை விட வேண்டி விவசாய அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

கோவை,தென்னமல்லூர் எனும் கிராமத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது.இந்த வங்கி சேவையை அந்த பகுதியின் சுற்றுப்புற பகுதியிகளான தேவராயபுரம், போளுவாம்பட்டி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக விவசாய மொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் இந்த வங்கி சேவை முடக்குவதாக வந்த தகவலையடுத்து, தமிழக விவசாயிகள் சங்கம் உட்பட அப்பகுதியை சேரந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளனர்.

அம்மனுவில் நீண்ட காலமாக விவசாயிகள் பயன்படுத்தி வந்த குறிப்பிட்ட வங்கி சேவையை முடக்கினால் அப்பகுதியில். சுமார் 10 கி.மீட்டருக்கு மேல் வங்கி சேவைக்கென விவசாயிகள் செல்ல வேண்டியிருப்பதால் குறிப்பட்ட வங்கியே தொடர வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க