• Download mobile app
17 Jul 2025, ThursdayEdition - 3445
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்

July 17, 2025 தண்டோரா குழு

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கிராப்ட் பஜார் 2025 பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் இன்று (ஜூலை 17) முதல் ஜூலை 22 வரை 6 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை மக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு கடந்த 1988-ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது.தமிழகத்தின் மாநிலம் மற்றும் நாட்டின் கைவினை மரபுகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பு சார்பில் வடிவமைப்பு மேம்பாடு, பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளில் கைவினை கலைஞர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் கலந்துகொள்ளும் “கிராப்ட் பஜார் 2025” ஒவ்வொரு ஆண்டும் கோவையில் நடைபெறுகிறது. இதில் கலை, கைவினை மற்றும் ஜவுளி வகை பொருள்கள் ஒரே கூரையின் கீழ் விற்பனைக்காக காட்சிக்கு வைக்கப்படுகின்றன.பொதுமக்கள் நேரடியாக கைவினை கலைஞர்களிடமிருந்து வாங்கும் வாய்ப்பு இங்கு கிடைக்கிறது.

“நம்பிக்கை” என்ற திட்டம் 2023-ம் ஆண்டு கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மூலம் தொடங்கப்பட்டது. இதில் கைவினை கலைஞர்களுக்கு பயணம், தங்குமிடம் மற்றும் கண்காட்சி பங்கேற்புக்கான ஆதரவு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினை குழுக்கள் பங்கேற்ற்றுள்ளன.
இந்தக் கண்காட்சியில் கேரளத்தைச் சேர்ந்த “சரகலயா” குழுவினர் தெய்யம் முகமூடிகள், திருகு பைன் கைவினை, பாரா மற்றும் டெரகோட்டா சிற்பங்களை காட்சிக்கு வைக்கின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த லம்பாடி எம்பிராய்டரி கலைஞர்களைக் கொண்ட குழுவின் “புரியா அறக்கட்டளை” சார்பிலும் கைவினைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓல கைவினை குழு சார்பில் தரமான பனை ஓலை நகைகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
ஜவுளி காட்சிப்பொருட்கள் : சூஃப் எம்பிராய்டரி, புல்காரி, சிக்கன்காரி, பார்மர் அப்ளிக், புலியா, மங்கள்கிரி, செட்டிநாடு கைத்தறி, காஷ்மீர் வேலைப்பாடு, தோடா, படோலா, கட்வால், பந்தேஜ், அஜ்ராக், ஷிபோரி, டஸ்ஸர், பக்ரு, ஜெய்ப்பூர் ஹேண்ட் பிளாக் பிரிண்ட், லம்பாடி எம்பிராய்டரி உள்ளிட்ட பொருள்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

கலை மற்றும் கைவினைப் பொருட்கள் : மட்பாண்டங்கள், மர வேலைப்பாடுகள், பித்தளைப் பொருட்கள், அரக்கு வளையல்கள், நாணல் கூடைகள், கண்ணாடி வளையல்கள், மூங்கில் மற்றும் கரும்பு கைவினைகள், டெரகோட்டா சிற்பங்கள், தெய்யம் முகமூடிகள் உள்ளிட்ட பொருள்களும் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.
ஓவியங்கள்:கோண்ட்,மிதிலா,மைசூர், செரியல்,பிச்வாய்,ராஜஸ்தான் மினியேச்சர், வார்லி, குருவாயூர் சுவரோவியம் உள்ளிட்ட பாரம்பரிய ஓவிய வகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மேலும் படிக்க