• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “சரங் 2025″ கோடை கால கண்காட்சி துவக்கம்

January 10, 2025 தண்டோரா குழு

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “சரங் 2025” இரண்டு நாள் கைவினை பொருட்கள் கண்காட்சி 2025 ஜனவரி 10 அன்று துவங்கியது.

இந்த விற்பனையின் தனித்தன்மை, மீண்டும் மீண்டும் பங்கேற்பவர்களை தவிர்த்து, நிர்வாக குழு வரிசை முறையில் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு பூர்வீக நெசவுமுறை, நிலத்தன்மை, கலை,கைவினை வடிவத்துடன் இணைந்து செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது. இந்த வகைகளில் ஏதேனும் ஒரு காரணியாவது இருப்பதில் கவனத்துடன் செயல்படுத்துகிறது.

அகில இந்திய அளவிலிருந்து சரங் பெயரில் பங்கேற்புகள் உள்ளன. இந்த முறை லூலூ மார்க்கெட்டின் இடதுபுறம் உள்ள லட்சுமி மில்ஸ் சந்திப்பு ஊரக மையத்தில் இக்கண்காட்சி நடக்கிறது. காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இக்கண்காட்சி நடக்கிறது.

தமிழ்நாடு கிராப் கவுன்சிலின் நிதி திரட்டுவதாக சரங் கோடை கால கண்காட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்கள்,கலைஞர்களின் மேம்பாட்டிற்காக இந்த கண்காட்சி,37 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது. சென்னையில் உள்ள இந்திய கிராப் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளதன் வாயிலாக, உலக கைவினை கவுன்சில் அங்கீகாரத்தையும் பெற்றதாகிறது.

குறைந்த காலத்தில் கோவை மக்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றுள்ள தனித்துவமிக்க சரங் கண்காட்சி நான்காவது ஆண்டாக நடக்கிறது.சாரங்கில் பொருட்களை வாங்கும்போது, நம்பகமான வகையில், நெசவாளர்கள், கைவினை பொருள் செய்வோர், கலைஞர்கள், வடிவமைப்பாளர்களிடமிருந்து பெறுவதை உறுதி செய்யலாம்.

ஜவுளி பொருட்கள், சேலைகள், ஆண், பெண், குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள், அரிய வகை, வீடு, தோட்டங்களுக்கான அலங்காரங்கள், செராமிக், காலணி வகைகள், உதிரி பாகங்கள் போன்றவைகள் பங்கேற்று காத்திருக்கின்றன.

கோவை மக்கள் வாங்கி பயன்பெற 30க்கும் மேற்பட்ட வகையான அரங்குகள் இடம் பெற்றுள்ளன. உணவருந்தி மகிழ நான்கு வகையான அரங்குகளும் இடம் பெற்றுள்ளன.பொருட்களை வாங்குவோர் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கவும், சொந்தமாக பைகளை எடுத்து வருமாறு தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில் கேட்டுக் கொள்கிறது.

மேலும் படிக்க