June 27, 2018
தண்டோரா குழு
சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞாநந்தா தமிழக ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இத்தாலியில் நடைபெற்ற கிரெடின் ஓபன் சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த 12 வயது மாணவன் பங்கேற்று இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.இதன் மூலம் மிக குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார்.
இதையடுத்து,சிறுவன் பிரக்ஞாநந்தாவுக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி,துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,நடிகர் கமல்ஹாசன்,காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில்,இத்தாலியிலிருந்து நேற்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு நேற்று விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிகப்பட்டது.இந்நிலையில்,பிரக்ஞானந்தா இன்று குடும்பத்துடன் கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.அப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரக்ஞானந்தாவுக்கு நினைவு பரிசு வழங்கி மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா குடும்பத்தினருடன் ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்தனர்.